/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை தடுப்பு சுவர் சேதமடைந்து கழிவுநீர் தேங்கும் அவலம் தேனி நகராட்சி பள்ளிஓடைத்தெரு குடியிருப்போர் குமுறல்
/
சாக்கடை தடுப்பு சுவர் சேதமடைந்து கழிவுநீர் தேங்கும் அவலம் தேனி நகராட்சி பள்ளிஓடைத்தெரு குடியிருப்போர் குமுறல்
சாக்கடை தடுப்பு சுவர் சேதமடைந்து கழிவுநீர் தேங்கும் அவலம் தேனி நகராட்சி பள்ளிஓடைத்தெரு குடியிருப்போர் குமுறல்
சாக்கடை தடுப்பு சுவர் சேதமடைந்து கழிவுநீர் தேங்கும் அவலம் தேனி நகராட்சி பள்ளிஓடைத்தெரு குடியிருப்போர் குமுறல்
ADDED : ஜன 08, 2025 05:30 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பள்ளி ஓடைத்தெருவில் பல இடங்களில் ரோடு, சாக்கடை தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் முதல்வார்டில் நேருஜி தெரு, வடக்கு மெயின் தெரு, பஜார் தெரு, லிங்கம்மாள் தெரு, திரு.வி.க., தெரு, பாலன் நகர், பள்ளிஓடைத்தெரு, பட்டாணி தெரு உள்ளிட்ட தெருக்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் பள்ளி ஓடைத்தெரு, பட்டாளம்மன் கோயில் தெருக்களில் அடிப்படை வசதிகள் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் தெருக்கள் உள்ளன. சீரற்ற ரோடு, பல இடங்களில் சாக்கடை தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகின்றன. சீரமைக்க கோரி நகராட்சியில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என இப்பகுதி பொதுமக்கள் புலம்புகின்றனர்.
ரோட்டில் விழும் வாகன ஓட்டிகள்
சின்னசாமி, பள்ளிஓடைத்தெரு, தேனி: ரோட்டில் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வருவோர் நிலை தடுமாறி விழுவது தொடர்கிறது. இப்பகுதியில் சேதமடைந்துள்ள ரோடு, பேவர் பிளாக் கற்களால் பொதுமக்கள், முதியவர்கள் சிரமம் அடைகின்றனர். சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேஷன் கடைக்கு செல்வோர் விபத்தில் சிக்கும் அவலம்
முருகேஸ்வரி, பள்ளிஓடைத் தெரு, தேனி : இந்த பகுதியில் உள்ள சாக்கடைகள் செல்லரித்தும், பல இடங்களில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த நிலையில் உள்ளன. இதனால் பல இடங்களில் முறையாக கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சாக்கடைகளை துார்வாரி அதில் கிடைக்கும் மண்ணை உடனே அப்புறப்படுத்தாமல் அருகிலேயே விட்டு செல்கின்றனர். சில நாட்களில் அவை மீண்டும் சாக்கடைக்கே செல்கின்றன. ரேஷன் பொருட்கள் வாங்க பள்ளி ஓடைத்தெருவில் இருந்து மெயின்ரோட்டை கடந்து பொம்மைய கவுண்டன்பட்டிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் ரோட்டை கடந்து செல்லும் போது பலர் விபத்துக்களில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இந்த பகுதியில் ரேஷன் கடையும் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். தெருவில் பலரும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதால் மற்ற வீடுகளுக்கு சீராக குடிநீர் வருவதில்லை. குப்பை வாங்க நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வருவதில்லை. இப்பகுதியில் சாக்கடைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.