/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்புக்குள் காட்டுயானைவனத்துறையின் சிறப்பு படை
/
குடியிருப்புக்குள் காட்டுயானைவனத்துறையின் சிறப்பு படை
குடியிருப்புக்குள் காட்டுயானைவனத்துறையின் சிறப்பு படை
குடியிருப்புக்குள் காட்டுயானைவனத்துறையின் சிறப்பு படை
ADDED : செப் 25, 2011 09:41 PM
மூணாறு:குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை
விரட்டியடிக்க, வனத்துறையினர் ஐந்து பேர் கொண்ட சிறப்பு படை
அமைக்கப்படுகிறது.
மூணாறிலும், சுற்றுப் பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம்
நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாக நகரை ஒட்டியுள்ள
டாடா ஆஸ்பத்திரி,நல்லதண்ணி எஸ்டேட் உள்பட பல்வேறு பகுதிகளில்
குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகளால்,பொது மக்கள் மத்தியில் பீதியில்
உள்ளனர்.
டாடா ஆஸ்பத்திரி வளாகத்தில் வசிக்கும் சாஜூவர்க்கீஸ் வீட்டின் முற்றத்தில்
நுழைந்த யானைகள், அங்கிருந்து அகன்று செல்லாததால், அவரது குடும்பத்தினர்
இரவு முழுவதும் பீதியுடன் பொழுதைக் கழித்தனர்.இதனையடுத்து சாஜூவர்க்கீஸ்
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு
வனத்துறை அமைச்சர் கணேஷ்குமாருக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட
ஐந்து பேர் கொண்ட சிறப்பு படை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.