ADDED : செப் 25, 2011 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி:பெரியகுளம் தாலுகாவில் கடந்த ஐந்து மாதங்களாக
மாற்றுத்திறளாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை
கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.மாதம் தோறும் மாற்றுத்
திறளாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு
வழங்கப்படும் தொகை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக
வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இத்தொகை
மாற்றுத் திறளாளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை தாமதம் இல்லாமல் மாதம் தோறும் வழங்க மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.