/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
/
தேனி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதியின்றி அவதி
ADDED : டிச 01, 2024 07:12 AM

தேனி : தேனி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர்.
தேனி தாலுகா அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் பெற தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இது தவிர அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம், ஆதார் மையத்தில் பதிவு செய்வதற்காகவும் பலர் வருகின்றனர்.ஆனால் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. கழிப்பறைகள் இருந்தாலும் பயன்பாட்டில் இல்லை.
அது போலவே குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இருந்தாலும் இயங்குவதில்லை.
இதனால் அலுவலகத்திற்கு பொதுமக்கள் உழவர் சந்தை அருகே உள்ள கட்டண கழிப்பறை, அல்லது மீறு சமுத்திர கரையை பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.