/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் தேனி பெண் பலி: மூவர் காயம்
/
விபத்தில் தேனி பெண் பலி: மூவர் காயம்
ADDED : நவ 18, 2024 07:10 AM
வத்தலக்குண்டு,: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே டூவீலரில் தாய், மனைவி, மகளுடன் தேனி வாலிபர் சென்ற போது வேன் மோதிய விபத்தில் தாய் இறந்தார். மற்ற மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
தேனி மாவட்டம் காமக்காபட்டி குமரேசன் 35. டூவீலரில் மனைவி பாரதி மணி 31, தாய் சரசு 55, குழந்தை கிருபாஸ்ரீ 7, உடன் வத்தலகுண்டில் இருந்து ஊருக்குச் சென்றனர். பயணியர் விடுதி அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் மில் வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் குமரேசனின் தாய் சரசு, ரோட்டில் விழுந்ததில் அவர் மீது வேன் டயர் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பலியானார்.
குமரேசன், அவரது மகள் கிருபா ஸ்ரீ, மனைவி பாரதிமணி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.