/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கும் மழைநீர் சிகிச்சைக்கு வருவோர் பாதிக்கப்படும் அபாயம்

ADDED : நவ 04, 2024 05:55 AM

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சிகிச்சைக்கு வருவோர் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது.
தேனி மதுரை ரோட்டில் க.விலக்கு அருகே அமைந்துள்ளது இம்மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி அருகில் உள்ள திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தினமும் புற நோயாளிகளாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
கனமழை பெய்தால் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக அவசர பிரிவில் இருந்து ரத்த வங்கி செல்லும் வழியில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு கூடம் அருகே மழைநீர் குளம் போல் தேங்குகிறது. டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் சுத்தமான நீர், மழைநீரில் உற்பத்தியாகிறது.
இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்குவது, பலரை பாதிப்பிற்கு உள்ளாக்கும். எனவே மருத்துவமனை வளாகத்தில் எங்கும் மழைநீர் தேங்காதவாறு, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.