/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கியதால் விவசாய பணிக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு
/
ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கியதால் விவசாய பணிக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு
ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கியதால் விவசாய பணிக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு
ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கியதால் விவசாய பணிக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு
ADDED : அக் 25, 2025 04:51 AM
போடி: கிராமங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் தொடர்வதால் தற்போது விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பருவமழையால் கிராமங்களில் மானாவாரி விவசாயம் துவங்கி உள்ளனர். இச் சூழலில் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் தூர்வாருவது, ரோட்டில் மண் அமைத்தல், ரோட்டோரம் மரக்கன்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
விவசாய பணி கடினம் என்பதால் 100 நாள் பணிக்கு 60 சதவீதம் பெண் தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர். எஞ்சிய தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள ஏலத்தோட்ட வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய பணிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 300 சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பது இல்லை. விவசாய பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
பலர் விவசாயம் செய்ய முடியாத நிலையில் நிலங்களை பிளாட்டுகளுக்கு விற்பனை செய்து வரு கின்றனர்.
சிலர் தொழிலாளர்களுக்கு பதிலாக இயந்திரங்களை நாடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். பயிர்கள் விதைப்பு, அறுவடை சீசன் காலங்களில் 100 நாள் வேலை வழங்குவதை தவிர் ஊராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.
இதன் மூலம் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகும் விவசாயம் தடையின்றி நடக்கும் என விவசாயிகள் வலி யுறுத்தி வருகின்றனர்.

