/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்து கோயில்களில் திருடியவர் கைது பூஜை பொருட்கள் பறிமுதல்
/
பத்து கோயில்களில் திருடியவர் கைது பூஜை பொருட்கள் பறிமுதல்
பத்து கோயில்களில் திருடியவர் கைது பூஜை பொருட்கள் பறிமுதல்
பத்து கோயில்களில் திருடியவர் கைது பூஜை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 07, 2024 07:16 AM

--தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் 38. இவர் கடந்த 27-ல் இதே பகுதியில் ராமக்கம்மாள் கோயில் பூட்டை உடைத்து பித்தளை குத்துவிளக்குகள், பொங்கல் பானை உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்றார்.
இதே போல் 2022 முதல் தற்போது வரை தேவதானப்பட்டி பகுதியில் 6 கோயில்கள், ஜெயமங்கலம் பகுதியில் 3 கோயில்கள், ஆண்டிபட்டி பகுதியில் 1 கோயில் என 10 கோயில்களில் கோபுர கலசம், உண்டியல் உடைத்து பணம், பூஜை பொருட்கள் திருடினார்.
இரு ஆண்டுகளாக போலீசாருக்கு சிக்காமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு செங்குளத்துப்பட்டி பகுதியில் கோயிலில் திருடிய போது தேவதானப்பட்டி எஸ்.ஐ.,க்கள் வேல் மணிகண்டன், ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர்.
இவரிடம் குத்துவிளக்குகள் -15, பொங்கல் பானைகள்- 5, கோபுர கலசம் -1, மணி, பூஜை தட்டு உட்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான 31 பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
--