/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம் இழந்தோர் ஆவணங்களை ஜூன் 6க்குள் சமர்ப்பிக்கலாம் முண்டியடித்து சமர்பித்த பெண்கள்

ADDED : ஜூன் 04, 2025 01:16 AM
தேனி: தனியார் நிறுவன அறக்கட்டளையில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் ஜூன் 6 மாலை 5:00 மணிக்குள் ஆவணங்கள், சான்றிதழ்களை வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.'', என, சி.பி.ஐ., போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவன அறக்கட்டளையில் பணம் செலுத்தினால் இரட்டிப்பு பணம் பெறலாம் என்ற விளம்பரத்தை நம்பி, பொது மக்கள் இத்திட்டத்தில் இணைந்தனர். முதிர்வுத் தொகை நிறைவு பெற்றதும் தனியார் நிறுவன அறக்கட்டளை நிர்வாகிகள், பணம் வழங்காமல் ஏமாற்றி தப்பிச் சென்றனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் டிபாசிட் செய்த நபர்களிடம்உள்ள ஆவணங்கள், சான்றிதழ்களை சேகரிக்க மதுரையில் இயங்கிவரும் சி.பி.ஐ., போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி போலீசார் தேனி எஸ்.பி., அலுவலக வளாகத்தில் முகாமிட்டு நேற்று முன்தினம் முதல் பணத்தை செலுத்தி ஏமாந்தவர்களிடம், சான்றிதழ்களை பெற்று, ஆவணங்களை பெற்றுக் கொண்டதற்கான கையொப்பம் இட்ட ரசீதுகளையும் பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கி வருகின்றனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் வரிசையில் நிற்பதற்கு சண்டை போட்டுக் கொண்டு இந்நிறுவனத்தில் பணம் டிபாசிட்செய்த பெண்கள் ஆவணங்களை சமர்பித்து வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், ஆவணங்களை சமர்பிக்க இறுதிநாள் ஜூன் 6 மாலை 5:00 மணி வரை ஆவணங்களை பெற உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை வழங்கலாம்,'என்றனர்.