/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தவ்ஹீத் ஜமாத் தலைவரிடம் ரூ.1.25 கோடி மோசடி
/
தவ்ஹீத் ஜமாத் தலைவரிடம் ரூ.1.25 கோடி மோசடி
ADDED : டிச 27, 2025 04:28 AM
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் முகமதுசித்திக்கிடம் 48, நண்பராக பழகி ரூ.1.25 கோடி பெற்று ஏமாற்றிய ஆசிக்ராஜா 36, மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தென்கரை வாகம் புளித்தெரு பிஸ்மிநகரைச் சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவராக உள்ளார். இவரது நண்பர் மூன்றாந்தல் பகுதியைச் சேர்ந்த ஆசிக்ராஜா அலைபேசிக்கடை நடத்துவதுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
2022ல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு பெரியகுளம் பகுதியில் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டு வதற்கு 5 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு முகமது சித்திக், சம்பந்தப்பட்டவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இதனை ஆசிக்ராஜா கண்காணித்தார். முகமது சித்திக் கிடம் ஜமாத் பணம் அதிகளவில் உள்ளது என தெரிந்து கொண்டார். அவசர தேவைக்காக ரூ.1.25 கோடி கடன் கேட்டார்.
பணம் தர மறுத்தால் வியாபாரத்தில் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படும். 10 நாட்களில் பணம் திருப்பி கொடுப்பதாக 2022ல் ஏப்ரலில் முகமதுசித்திக்கிடம் ஆசிக்ராஜா ரூ.1.25 கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திரும்ப கொடுக்காமல் ஆசிக்ராஜா ஏமாற்றினார். முகமது சித்திக் புகாரில் தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் மற்றும் போலீசார் விசாரித்து ஆசிக்ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர்.

