/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது
/
அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது
ADDED : ஏப் 21, 2025 06:47 AM
தேனி: வீரபாண்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்களை, போலீசார் சுற்றி வளைத்த போது தப்ப முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் வீரபாண்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலார்பட்டியில் இருந்து பெருமாள் கவுண்டன்பட்டி ரோட்டில் தனியார் தோட்டத்தில் சேவல் சண்டை நடத்துவது தெரிந்தது. அந்த இடத்திற்கு சென்றனர். போலீசார் நிறுத்தி, அனுமதியின்றி போட்டி நடத்திய உத்தமபாளையம் கோகிலாபுரம் சுரேஷ் 36, மார்க்கையன்கோட்டை தோட்ட தேவர்சந்து தாழவிக்னேஷ் 30, கள்ளர் பள்ளித்தெரு ஜெயபிரபு 38, வைகை அணை மெயின்ரோடு பிச்சைமணி 23, ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த சேவல்கள், பணம் ரூ.6,680ஐ பறிமுதல் செய்தனர். வழக்கு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

