/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் கம்பத்தில் கார் மோதி மூவர் காயம்
/
மின் கம்பத்தில் கார் மோதி மூவர் காயம்
ADDED : ஆக 06, 2025 09:11 AM

போடி, : கேரளா அருகே மாட்டுப்பட்டி எஸ்டேட் குட்டியார் டிவிஷனில் வசிப்பவர்கள் முருகன் 53, கிருஷ்ணன் 47, சாந்தன் குமார் 24. இவர்கள் மூவரும் சென்னை சென்று விட்டு, கேரளா செல்வதற்காக நேற்று போடி முந்தல் ரோட்டில் அதி வேகமாக காரில் சென்றுள்ளனர்.
வேகமாக சென்ற காரின் முன் பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து மின் ஓயர்கள் அறுந்து கீழே விழுந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த தடுப்பு மீது மோதி நின்றது. காரில் இருந்த முருகன், கிருஷ்ணன் உட்பட மூவரும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு சென்ற மின் பணியாளர்கள் சீரமைத்தனர். காயம் அடைந்த மூவரும் போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மூணாறு லோயர் டிவிஷனை சேர்ந்த கார் டிரைவர் விஜய் 29., மீது குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.