ADDED : நவ 02, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி 23 வது வார்டு முத்துராஜா தெருவில் நேற்று வெறிநாய் ஒன்று இடுக்கடி லாட் தெருவைச் சேர்ந்த முனியம்மா 45,வெள்ளைச்சாமி 60 செல்வராஜ் 55. ஆகியோரை கடித்தது. இவர்கள் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
வெறிநாய் ஆக்ரோஷமாக ஓடி தெருவில் செல்பவர்களை விரட்டியது. சுதாரித்து சிலர் வீட்டிற்குள் ஓடி தப்பினர். சிலர் கீழே விழுந்து காயப்பட்டனர்.
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பணியாளர்கள் வெறிநாயை பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரு கின்றனர்.--

