/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி
/
ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி
ADDED : பிப் 05, 2025 07:20 AM
மூணாறு: மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சென்ற ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் குமார். தினமும் இரவில் தனக்கு சொந்தமான ஜீப்பில் போடியில் இருந்து மூணாறுக்கு பூக்கள் ஏற்றி வரும் இவர், அதிகாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சென்றபோது ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றது. அதனால் அச்சத்தில் ஒரு சில நிமிடம் ஜீப்பை நிறுத்தியவர் பின்னர் சென்றார். மூணாறு நகரில் வன உயிரின காப்பாளர் அலுவலகம் அருகே கடந்த வாரம் புலி நடமாடிய நிலையில், நேற்று மூணாறில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் நடமாடியது குறிப்பிடதக்கது.