/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிவுநீர் வாய்க்காலில் ஆபத்தான மின்கம்பம் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் திருமலாபுரம் ஊராட்சி அன்னை இந்திரா நகர்
/
கழிவுநீர் வாய்க்காலில் ஆபத்தான மின்கம்பம் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் திருமலாபுரம் ஊராட்சி அன்னை இந்திரா நகர்
கழிவுநீர் வாய்க்காலில் ஆபத்தான மின்கம்பம் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் திருமலாபுரம் ஊராட்சி அன்னை இந்திரா நகர்
கழிவுநீர் வாய்க்காலில் ஆபத்தான மின்கம்பம் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் திருமலாபுரம் ஊராட்சி அன்னை இந்திரா நகர்
ADDED : ஆக 30, 2025 04:28 AM

தேனி: ''சாக்காடை கால்வாயை மறைத்து கட்டப்பட்ட உயரழுத்த மின்கம்பத்தால் இடையூறு: சேதமடைந்த சாக்கடை கட்டமைப்புகளால் தெருவில் ஓடும் கழிவுநீரால்சுகாதாரக்கேடு; குடிநீர் பற்றாக்குறையால் அவதி; பெண்கள், சிறுவர்களை மிரட்டும் தெரு நாய்கள்; பஸ் நிறுத்தம் இன்றி அவதிப்படும்பொது மக்கள்; பற்றாக்குறையாக விநியோகிக்கப்படும் குடிநீரால் சிரமப்படும் பொது மக்கள்.'' என, பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளால் ஆண்டிபட்டி தாலுகா திருமலாபரம் ஊராட்சியின் அன்னை இந்திரா நகர் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நகரில் ஊராட்சியின் 2, 3வது வார்டுகளில் ஒரு மெயின் தெரு, 8 குறுக்குக் தெருக்கள் உள்ளன. 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேல்நிலைத் தொட்டியில் இருந்து சப்ளையாகும் குடிநீர், நகர் முமுவதும் உள்ள பொது குடிநீர் வினியோக திருகு குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப் படுகின்றன. ஆனால் விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ள 3வது குறுக்குத் தெருவில் இருந்து தெற்குப் புறத்தில் உள்ள 4 தெருக்களில் குடிநீர் சப்ளை இன்றி பொது மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் குறுக்குத் தெருக்கள், மெயின் தெருக்களின் இருபுறங்களிலும் உள்ள சாக்கடை கால்வாய்களில் தேங்கும் கழிவுகளை அகற்றும் ஊராட்சி சுகாதார ஊழியர்கள் கழிவுகளை ஆங்காங்கே குவியல்களாக வைத்துவிடுகின்றனர். அதனை பொது மக்கள் அள்ளிச் சென்று மேற்குப் பகுதியில் உள்ள கரட்டுப் பகுதியில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதுதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதனால் குவியல்களை உடனுக்குடன் அள்ளிச் செல்ல ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபத்தான் மின்கம்பம் மெயின் தெருவில் இருபுறமும் சாக்கடை கட்டமைப்பு ஆங்காங்கு சேதமடைந்துள்ளது. மழை காலங்களில் கழிவுநீருடன் செல்லும் மழைநீர் தெருவில் செல்லும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ள வீட்டீன் சுவரில் விழுந்த உயரழுத்த மின் கம்பம், சீரமைக்கப்பட்டு, சமீபத்தில் புதிதாக மின்வாரியம் மூலம் மாற்றப்பட்டது. ஆனால், அதனை முறையாக மாற்றாமல் சாக்கடை வாய்க்காலில் கழிவுநீர், மழைநீர் செல்வதை தடுக்கும்விதத்தில் கான்கிரீட் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்கம்பம் ஸ்ட்ராங்கா இருக்கு, ஆனால், பேஸ்மட்டம் மண்ணில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அடிப்படை பிரச்னைகள் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கூடுதல் போர்வெல் அவசியம் பழநிவேல், ரேஷன் கடை குறுக்குத் தெரு, அன்னை இந்திரா நகர்: மேல்நிலை குடிநீர் தொட்டி அடிப்பகுதி சேதமடைந்து அதனை சீரமைத்துக் கொடுத்தனர்.ஆனால் மேல்நிலைத் தொட்டியில் உள்ள மேல்பகுதியில் தண்ணீர் தேங்கும் தொட்டியில் மேற்கூரை அமைந்துள்ள கான்கீரீட் சிலாப்'கள் உடைந்து தண்ணீருக்குள் விழுகிறது. அடிக்கடி குடிநீரை குளோரினேஷன் செய்து விநியோகிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதனை முறையாக செய்வது இல்லை. அதனை ஊராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். மேலும் குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பொது மக்கள் பெண்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிகின்றன. அவற்றை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். பயன்பாட்டு நீருக்காக 2 இடங்களில் 'போர்வெல்' அமைக்கப்பட்டுள்ளன. இது பற்றாக்குறையாக உள்ளது.மேலும் தேவைப்படும் இடங்களில் போர்வெல்' அமைத்துத் தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
பஸ் நிறுத்தம் வேண்டும் தேவராஜ், விநாயகர் கோயில் குறுக்குத்தெரு: எங்கள் குடியிருப்புப் பகுதி 7 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 1984ல் 225 பேருக்கு வீடுகட்டி வழங்கினர். ஆனால் அந்த 225 குடும்பத்தின் வாரிசுதாரர் குடும்பத்தினர் 150 பேர் தனித்தனி குடும்பமாக ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். அவர்கள் வீடின்றி, திறந்த வெளியில்தான் தங்கி வருகின்றனர்.
மேலும் வீடுகட்டி வழங்கப்பட்ட இடங்கள் நான்கு நபர்களின் பெயர்களில் கூட்டுப்பட்டாவாக உள்ளது. இதனை பிரித்து தனி நபர்களின் பெயர்களில் பட்டா வழங்க வேண்டும். இதுகுறித்து, உங்களுடன் ஸ்டாலின்'முகாம்களில் மனு அளித்துள்ளோம். மேலும் தேனி மதுரை பைபாஸ் ரோட்டில் பொது மக்கள் தேனிக்கு செல்வதற்காக பஸ்சிற்காக வெயிலில் நின்று பாதிக்காமல் இருக்க, தெற்குப் பகுதியில் பஸ் நிறுத்தம்அமைத்துத் தர வேண்டும்., என்றார்.