/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் மீட்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் கடைகளில் வாங்க அனுமதி
/
மின் மீட்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் கடைகளில் வாங்க அனுமதி
மின் மீட்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் கடைகளில் வாங்க அனுமதி
மின் மீட்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியார் கடைகளில் வாங்க அனுமதி
ADDED : செப் 20, 2024 06:34 AM

கம்பம் : மின்வாரியத்தில் மீட்டர் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க தனியார் கடைகளில் வாங்கிக் கொள்ள இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதிய மின் இணைப்பு பெற பொதுமக்கள் பணம் செலுத்தி , மீட்டர் இல்லாததால் இணைப்பு பெற முடியாமல் பல ஆண்டுகளாக சிரமம் அடைகின்றனர். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 100 மீட்டர்கள் தருவார்கள். ஆனால் புதிய இணைப்பிற்கு பணம் செலுத்தி காத்திருப்பவர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள். இதனால் தமிழகம் முழுவதும் மின் இணைப்பு பெற முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புலம்பினர். பிரச்னையை சமாளிக்க மீட்டர்களை தனியார் கடைகளில் பொதுமக்கள் வாங்கி கொள்ள கடந்த மாதம் வாரியம் அனுமதி வழங்கியது. ஆனால் அதன் பின்பும் மீட்டர் வாங்குவது தொடர்பாக தெளிவான உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைந்தது 500 பேர் பணம் செலுத்தி மின் இணைப்பிற்காக காத்திருக்கின்றனர். மீட்டர் தட்டுப்பாடே இதற்கு காரணமாகும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து கடைகளில் மீட்டர் வாங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது . அந்த நிறுவனங்கள் இந்த மாத இறுதியில் மீட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது . பொதுமக்கள் விரும்பிய நிறுவனத்தில் வாங்கி கொள்ளலாம். மின் கட்டண தொகையில் இருந்து மீட்டர் கொள்முதல் தொகை கழித்து தரப்படும் என்றார்.
பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க உள்ளது.