ADDED : டிச 31, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிப்பட்டி எஸ்.ஐ., ராஜசேகர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
சக்கம்பட்டி வடக்கு தெருவைச்சேர்ந்த சுப்பிரமணி 58, என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருப்பில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
கடையில் இருந்த ரூ.9450 மதிப்புள்ள 945 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.