
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் மார்க்கெட்டிற்கு தினமும் 5 டன்னிற்கும் அதிகமாக தக்காளி விற்பனையாகும்.
அறுவடை சமயத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் செடி அழுகி உள்ளூர் தக்காளி வரத்து இல்லை. இதனால் நவ.22 ல் தக்காளி கிலோ ரூ.70 ஆக விலை உயர்ந்தது. தற்போது சாரல் மழையால் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து 'சாகோ' ரகம் தக்காளி வரத்துள்ளது. இதன் விலை நேற்று கிலோ ரூ.100 க்கு விற்றது. விலை உயர்வால் ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது.--

