ADDED : நவ 04, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் ஜெயமங்கலம் சமுதாயக் கூடத்தில் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடக்கிறது. பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பங்கேற்பவர்கள் 4 புகைப்படங்கள், ஆதார், ரேஷன் கார்டு நகலுடன் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.