/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நான்கு லட்சம் ரசிப்பு
/
இடுக்கிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நான்கு லட்சம் ரசிப்பு
இடுக்கிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நான்கு லட்சம் ரசிப்பு
இடுக்கிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நான்கு லட்சம் ரசிப்பு
ADDED : ஜன 05, 2025 06:36 AM
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா பகுதிகளை டிசம்பரில் 4,05,333 சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
இந்த முறையும் கடந்தாண்டுகளை போன்று மிகவும் கூடுதலாக வாகமண் மலை குன்றுக்கு 1,22,430 பயணிகள் சென்றனர். உள்ளூர் பயணிகள் மட்டும் இன்றி வெளிநாட்டு பயணிகளும் அதிகம் வந்தனர். கடந்த டிசம்பரில் மட்டும் வெளிநாட்டு பயணிகள் 540 பேர் வருகை தந்தனர்.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையில் அதிகம் பயணிகள் வருகை தந்தனர். டிச.23 முதல் 31 வரை மட்டும் 2,14,617 பேர் வந்தனர். இதே கால அளவில் கடந்தாண்டு 2,03,430 பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலாதுறைக்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள் தவிர வனம், ஹைடல் டூரிசம் ஆகிய துறைகள் சார்பிலான சுற்றுலா பகுதிகளுக்கும் பயணிகள் அதிகம் சென்றனர்.
மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக சுற்றுலா பகுதிகளுக்கு டிச. ஒன்று முதல் டிச.31 வரை சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை:
மாட்டுபட்டி 12,538, ராமக்கல்மேடு 34,082, அருவிகுழி 3823, ஸ்ரீநாராயணபுரம் 15,508 (வெளிநாட்டு பயணிகள் 109), வாகமண் மலை குன்று 1,22,430, அட்வஞ்சர் பூங்கா 1,06,918, பாஞ்சாலிமேடு 24,276, இடுக்கி ஹில் வியூ பார்க் 13,935 (வெளிநாட்டு பயணிகள் 44), மூணாறு தாவரவியல் பூங்கா 49,016 (வெளிநாட்டு பயணிகள் 474), இடுக்கி பார்க் 946 (வெளிநாட்டு பயணிகள் 13, ஆமைப்பாறை 19,988, மூணாறு பார்க் நடைபாதை 1987.