/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் நீர் வரத்து இன்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
சுருளி அருவியில் நீர் வரத்து இன்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுருளி அருவியில் நீர் வரத்து இன்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுருளி அருவியில் நீர் வரத்து இன்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : மார் 05, 2024 04:14 AM
கம்பம், : சுருளி அருவியில் நீர் வரத்து முழுவதும் நின்றுள்ளதால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தென் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி முக்கியமானதாகும். மேகமலை பகுதியில் இருந்து வரும் நீர் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக வந்து சுருளி அருவியில் கொட்டுகிறது.
இந்த நீர் மூலிகை தன்மை கொண்டது என்பதால் தீராத நோய்கள் கூட குணமாகும் என்பது ஐதீகம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து இருக்காது.
கடந்த பிப்ரவரி மூன்றாவது வாரத்திலிருந்து நீர் குறைந்து, தற்போது முழுமையாக நின்று விட்டது. அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பதில் அதில் விழும் தண்ணீரை குடித்து விட்டு செல்கின்றனர்.
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேகமலை பகுதியில் மழை பெய்தால் மட்டுமே இனி சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.