sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் புதர்மண்டிய பூங்காக்கள், சேதமடைந்த பொழுதுபோக்கு அம்சங்கள்

/

வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் புதர்மண்டிய பூங்காக்கள், சேதமடைந்த பொழுதுபோக்கு அம்சங்கள்

வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் புதர்மண்டிய பூங்காக்கள், சேதமடைந்த பொழுதுபோக்கு அம்சங்கள்

வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் புதர்மண்டிய பூங்காக்கள், சேதமடைந்த பொழுதுபோக்கு அம்சங்கள்


ADDED : நவ 10, 2024 06:47 AM

Google News

ADDED : நவ 10, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி, : பராமரிப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத வைகை அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்துடன் செல்லும் அவல நிலை தொடர்கிறது.

வைகை அணைக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கேரளா, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா செல்லும் பயணிகள் வைகை அணை பூங்காக்களை ரசித்துச் செல்ல தவறுவதில்லை. வைகை அணையின் பரந்து விரிந்த நீர்த்தேக்கம், முகப்பில் பெரிய, சிறிய மதகுகள் வழியாக நீர் வெளியேறும் அழகு, வைகை அணையின் வலது, இடது கரைகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட பூங்காக்கள், அங்கு அமைக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஒரு நாளை மகிழ்ச்சியுடன் செலவிடுவதற்கு ஏற்ற இடமாக இருந்தது.

நிதி மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வைகை அணை பூங்கா பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.

சுற்றுலா வரும் பயணிகளுக்கும் பூங்காவில் ஓய்விடம், குடிநீர் , சுத்தமான கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் ஏமாற்றம் அடைகின்றனர். வைகை அணை பூங்கா குறித்து சுற்றுலா வரும் பயணிகள் கூறியதாவது:

புதர் மண்டிய பூங்காக்கள்


வீரமணி, சிவகங்கை: வைகை அணையின் மேல் பகுதியில் இருந்து நீர் தேக்கத்தை பார்வையிட

ஒரு கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் மழை வெயிலுக்கு ஒதுங்குவதற்கு இடம் இல்லை. பரந்து விரிந்த வலது, இடது கரை பூங்காக்களில் கேன்டீன் வசதி இல்லை. ஸ்நாக்ஸ் கடைகள் தான் அதிகம் உள்ளது. குழந்தைகள் விளையாடும் பூங்காக்களில் உள்ள ராட்டினம், ஊஞ்சல், டிராலி ஆகியவை சேதமடைந்து பயன்படுத்த முடியவில்லை. பூங்கா முழுவதும் புதர் மண்டியுள்ளது.குடிநீர் வசதி இல்லை. பூங்காக்களில் உடைந்த சிலைகள், அமரும் இருக்கைகள், பல இடங்களில் குவிந்துள்ள குப்பை பூங்காக்களின் அழகை கெடுத்து வருகிறது.

பொழுது போக்கு அம்சங்கள் பராமரிக்கனும்


என்.ரெங்கராஜ், கோவை :

மேட்டூர் அணை, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை பாலக்காடு மலம்புழா அணை இவைகளுக்கு இணையாக வைகை அணை மற்றும் பூங்கா இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். அங்குள்ள லைட்டிங், நீர் ஸ்ப்ரே போன்று வைகை அணையிலும் அமைக்கலாம். ஏற்கனவே இங்குள்ள குழந்தைகளை குதூகலமாக்கும் மாதிரி ரயில், இசை நடன நீரூற்று, பெடல் போட்டிங், செயற்கை நீரூற்று ஆகியவற்றை பராமரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தாலே வைகை அணை மற்றும் பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பிடமாக அமையும். அரசு அரசு நிதி ஒதுக்கீட்டில் வீணாக கிடக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை பராமரிக்காமல், தற்போது தனியார் மூலம் கூடுதல் கட்டணத்தில் பொழுதுபோக்கு அம்சமான ராட்டினங்களை கொண்டு வந்துள்ளனர்.

வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு தேவை


தீர்வு: வைகை அணை பூங்காவை கடந்த காலங்களில் 300க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் அலுவலர்கள் பராமரித்து வந்தனர். பராமரிப்பு பணிகள் உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் இருந்தது. நிரந்தர பணியாளர்கள் பணி ஓய்வுக்கு பின் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது 80 தற்காலிக பணியாளர்கள், உதவி செயற்பொறியாளர் பொறியாளர்கள் உட்பட நிரந்தர பணியில் 15 பேர் மட்டுமே உள்ளனர்.

அன்றாட பராமரிப்பு பணிகளிலும் கண்காணிப்பு இல்லை. சுற்றுலாத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக்குழு மூலம் வைகை அணைக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், செயல்பாடு இன்றி முடங்கி கிடக்கும் மாதிரி ரயில், படகு குழாம், இசை நடன நீரூற்று, செயற்கை நீரூற்று ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வைகை அணையின் வளர்ச்சிக்கு தேவையான நிதிஅரசு மூலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us