/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை தரைப்பாலத்தில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
/
வைகை அணை தரைப்பாலத்தில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
வைகை அணை தரைப்பாலத்தில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
வைகை அணை தரைப்பாலத்தில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 09, 2024 05:50 AM

ஆண்டிபட்டி : வைகை அணை தரைப் பாலத்தை கடந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் போட்டோ, செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்காக்களை பார்த்துச் செல்ல தவறுவதில்லை.
கடந்த சில நாட்களாக அணை நீர்மட்டம் 71 அடியாக உயர்ந்து முழு அளவில் நிரம்பி உள்ளது. அணைக்கு உபரியாக வரும் நீர் முழுவதும் பெரிய, சிறிய மதகுகள் வழியாக வெளியேறுகிறது. கடந்த இரு நாட்களாக வெளியேறும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 4000 முதல் 5000 கன அடி வரை இருந்தது.
வெளியேறும் நீரால் அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது.
இதனால் பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியேறும் உபரி நீரின் அளவு நேற்று வினாடிக்கு 2353 கன அடியாக குறைந்தது.
இதனால் பாலத்தின் வழியாக செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
வைகை அணையின் பெரிய, சிறிய மதகுகள் வழியாக நீர் வெளியேறுவதால் அணையின் முகப்பு பகுதியில் உள்ள தரைப் பாலத்தில் சுற்றுலா பயணிகள் நின்று குழந்தைகளுடன் போட்டோ செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
அப்பகுதியில் ஆற்றில் நீரின் வேகம் அதிகம் இருப்பதால் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் பாலத்தை கடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.