/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் வழியோர கடைகளை அகற்ற கோரி வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு
/
மூணாறில் வழியோர கடைகளை அகற்ற கோரி வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு
மூணாறில் வழியோர கடைகளை அகற்ற கோரி வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு
மூணாறில் வழியோர கடைகளை அகற்ற கோரி வர்த்தகர்கள் போராட்டம் நடத்த முடிவு
ADDED : அக் 13, 2024 05:30 AM
மூணாறு: மூணாறில் வழியோரக் கடைகளை அகற்றி, போக்குவரத்து ஆலோசனை குழுவின் தீர்மானங்களை நடைமுறைபடுத்துமாறு வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள் போராட்டங்கள் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி அமைப்பில் தலைவர் பாபுலால், பொது செயலாளர் கணேசன், வியாபாரி, விவசாயி சமிதி தலைவர் ஜாபர் உள்பட நிர்வாகிகள் கூறியதாவது: மூணாறில் வர்த்தகத்தை பெரிதும் பாதிக்கும் அளவில் வழியோரக் கடைகள் அதிகரித்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என செப்.9ல் போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபோதும் பல்வேறு காரணங்களால் நடைமுறைபடுத்த இயலவில்லை. அரசின் ஐந்து வகை லைசென்ஸ்கள், வாடகை, ஜி.எஸ்.டி., ஊழியர்கள் ஊதியம், மின்கட்டணம் ஆகியவற்றை எதிர் கொண்டு வர்த்தகர்கள் வியாபாரம் செய்து வரும் நிலையில், வழியோர கடைகளால் வியாபாரம் இன்றி கடைகளை மூடும் நிலைக்கு வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
முதல்கட்டமாக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வழியோர கடைகளை அகற்ற ஒத்துழைக்குமாறு வலியுறுத்தப்படும். இரண்டாம் கட்டமாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்தவும், தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.