/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றம் மதுரை ரோட்டில் இரவில் அனுமதி இல்லை
/
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றம் மதுரை ரோட்டில் இரவில் அனுமதி இல்லை
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றம் மதுரை ரோட்டில் இரவில் அனுமதி இல்லை
தேனி ரயில்வே மேம்பால பணிக்காக அமலுக்கு வந்த போக்குவரத்து மாற்றம் மதுரை ரோட்டில் இரவில் அனுமதி இல்லை
ADDED : பிப் 28, 2024 05:34 AM

தேனி : தேனி மதுரை ரோட்டில் நடந்து வரும் ரயில்வே மேம்பால பணிக்காக தினமும் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 வரை போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.
தேனி மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.90.02 கோடி மதிப்பில் 1.26 கி.மீ., துாரத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் துாண் அமைக்கும் பணிகள் பெருமளவு முடிந்து விட்டதால் துாண்கள் மீது கான்கிரீட் பிளாக்கள் பொருத்தும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேனி தோட்டக்கலை அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் அன்னஞ்சி சென்று அல்லிநகரம் வழியாக மீண்டும் தேனி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. மேம்பால பணிகள் பிப்., 12ல் துவங்கிய போது முறையான முன்னேற்பாடுகள் இல்லாததால் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாகனங்கள் என்.ஆர்.டி., ரோடு, சிவாஜிநகர் வழியாகவும், எதிரும், புதிருமாக செல்ல துவங்கியதால் நகரமே ஸ்தம்பித்தது. இதனை தொடர்ந்து மேம்பால பணி நிறுத்தி மீண்டும் போக்குவரத்து தொடர்ந்தது. போக்குவரத்து மாற்றம், மாற்றுபாதை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. அரசு ஐ.டி.ஐ., அருகில் உள்ள ரோடு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களாக இரவில் போக்குவரத்து மாற்றம் செய்து முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நேரு சிலை முதல் அரண்மனைப்புதுார் விலக்கு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ரயில்வே கேட் வர்ணம் பூசும் பணிக்காக மூடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் துாண்கள் மீது கான்கிரீட் பிளாக்கள் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். லாரி தவிர பஸ், கார் உள்ளிட்டவை என்.ஆர்.டி., நகர் வழியாக மதுரை ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் சென்றன. மேம்பால பணிகள் நிறைவு பெறும் வரை இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை இத் தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.

