/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ரோடு விரிவாக்க பணியால் ஜன.2முதல் போக்குவரத்து மாற்றம்
/
தேனியில் ரோடு விரிவாக்க பணியால் ஜன.2முதல் போக்குவரத்து மாற்றம்
தேனியில் ரோடு விரிவாக்க பணியால் ஜன.2முதல் போக்குவரத்து மாற்றம்
தேனியில் ரோடு விரிவாக்க பணியால் ஜன.2முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 31, 2024 06:47 AM
தேனி: தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு விரிவாக்க பணிக்காக சிறு பாலம் கட்டுமான பணி நடக்க உள்ளதால் ஜன.,2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒருவழிபாதை அமல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மேல் பகுதியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணி துவங்க உள்ளது.
இதனால் ஜன.,2 முதல் தேனியில் இருந்து கம்பம் ரோடு செல்லும் வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாகவும், கம்பம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேரு சிலை வழியாகவே தேனி நகர்பகுதிக்குள் செல்ல வேண்டும். கம்பம் ரோட்டில் இருந்து தேனி வரும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல அனுமதி இல்லை.இந்த நடைமுறை கம்பம் ரோட்டில் சிறுபாலம் கட்டுமான பணி முடியும் வரை அமலில் இருக்கும். பொதுமக்கள் வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.