/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு
/
மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு
மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு
மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 01, 2024 12:25 AM
மூணாறு, : மூணாறில் பிப். 27ல் நடைபெற்ற 'பந்த்' தின்போது போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக நூறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ்குமார் 45, அதே பகுதியில் பிப்.26 இரவில் காட்டு யானை தாக்கி இறந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கூட்டணியினர் பிப்.27ல் மூணாறு பகுதியில் 'பந்த' நடத்தினர்.
அதனையொட்டி நகருக்குள் நுழையும் ரோடுகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அதனால் மதியம் 12:00 மணி வரை போக்குவரத்து தடைபட்டது.
அது தொடர்பாக நூறு பேருக்கு எதிராக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.