/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

ADDED : செப் 29, 2025 06:43 AM

மூணாறு : கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி, ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்துதல் ஆகியவற்றால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., துாரம் ரூ.1,250 கோடி செலவில் ரோடு விரிவு படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை 14 கி.மீ., துாரம் கடும் வனத்தினுள் ரோடு கடந்து செல்வதால், அப்பகுதியில் வனத்துறையினரின் தலையீட்டால் பணி செய்ய தடங்கல் ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதிகளில் மண் எடுக்கப்பட்டு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகின்றன. அப்பணிகள் பழைய மூணாறு பகுதியை எட்டியுள்ளன. விரிவாக்கப் பணிகளுக்கு எடுக்கப்பட்ட மண் ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள நிலையில், சொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
அதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது பூஜை நாட்கள் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வருகை அதிகரித்ததால் பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் 2ம் மைல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு பயணிகள், பொது மக்கள் ஆகியோர் செல்ல இயலாமல் தவித்தனர்.