/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருளில் மூழ்கிய நடைமேடை; போடியில் ரயில் பயணிகள் அச்சம்
/
இருளில் மூழ்கிய நடைமேடை; போடியில் ரயில் பயணிகள் அச்சம்
இருளில் மூழ்கிய நடைமேடை; போடியில் ரயில் பயணிகள் அச்சம்
இருளில் மூழ்கிய நடைமேடை; போடியில் ரயில் பயணிகள் அச்சம்
ADDED : மார் 01, 2024 12:24 AM

போடி : போடி ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் நடை மேடையில் விளக்குகள் எரியதால் இருள் சூழ்ந்து பயணிகள், சிரமம் அடைகின்றனர்.
போடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் மாலை 5:30 மணிக்கும், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இரவு 8:30 மணிக்கு போடியில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் செல்கின்றன. போடி ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை பகுதியில் குறிப்பிட்ட தூரம் மட்டுமே விளக்குகள் எரிகின்றன. ரயில் நிறுத்தம் பெட்டி எண் 8 ல் இருந்து 18 எண் உள்ள பெட்டி வரை கிழக்கு, மேற்கு பகுதியில் இருபுறமும் நடை மேடை பகுதியில் சில நாட்களாக இரவில் விளக்குகள் எரியாததால் நடைமேடை பெரும் பகுதி இருளில் மூழ்கி காணப்படுகின்றன.
இதனால் சென்னை செல்லும் பயணிகளும், அவர்களை வழி அனுப்ப வருபவர்களும் நடை மேடை பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலையில் சிரமம் அடைகின்றனர்.சிலர் டார்ச் லைட், அலைபேசி வெளிச்சத்தை பயன்படுத்தி ரயிலில் ஏறுகின்றனர். நடை மேடை பகுதியில் எலக்ட்ரிக் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் தெரியாமல் சிலர் கீழே விழுந்து செல்கின்றனர். இதனை சரி செய்ய பயணிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.திருட்டு, வழிப்பறி நடக்க வாய்ப்பு உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் நடைமேடை உள்ள மின் கம்பங்களை சீரமைத்து விளக்கு வசதி செய்யவும், பாதுகாப்பு போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

