ADDED : பிப் 23, 2024 05:42 AM
தேனி : 'அட்மா' திட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
ஆண்டிப்பட்டி, சின்னமனுார் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 80 விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள், மின்னனு வணிகம் மூலம் வேளாண் பொருட்களை விற்பனை செய்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடமலைகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள 40 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் வேளாண் காடுகள் முக்கியத்துவம் பற்றிய பயிற்சி வழங்கப்படுகிறது. பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் விதைசான்றுத்துறை சார்பில் விவசாயிகள் எவ்வாறு விதைச்சான்று பெறுவது.அதற்கு எவ்வாற விண்ணப்பிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. நான்கு பயிற்சிகளில் பங்கேற்க 160 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா ரூ.10ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.