/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணச்சீட்டு வழங்காமல் சிக்கிய நடத்துனர் போக்குவரத்து கழக விஜிலன்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை

ADDED : செப் 29, 2025 04:40 AM
மூணாறு : டபுள் டெக்கர்' பஸ்சில் பயணியிடம் பணம் பெற்று டிக்கெட் வழங்காத ஊழியர் விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் சிக்கினார்.
மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த பஸ் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:30 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும்.
12 இருக்கைகள் கொண்ட கீழ் தளத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.200ம், 38 இருக்கைகள் கொண்ட மேல் தளத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.400ம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில் டிரைவர், நடத்துனர் என பிரின்ஸ்சாக்கோ நேற்று முன்தினம் பஸ்சை ஓட்டிச் சென்றார். பெரியகானல் அருகே பவர் ஹவுஸ் பகுதியில் மாலையில் பஸ் வந்தபோது போக்குவரத்து கழக விஜிலன்ஸ் அதிகாரிகள் பஸ்சில் ஆய்வு செய்தனர்.
அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணியிடம் ரூ.400 வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்காதது தெரியவந்தது. அச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.