/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
/
போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
ADDED : ஆக 09, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் கூட்டம், வீரபாண்டியில் நடந்தது. கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் முப்பெரும் விழா குறித்து, மாவட்ட தலைவர் பாண்டி பேசினார். சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள டிஏ உயர்வினை அரியருடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன .