/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடல் மூணாறை தவிர்க்கும் பயணிகள்
/
முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடல் மூணாறை தவிர்க்கும் பயணிகள்
முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடல் மூணாறை தவிர்க்கும் பயணிகள்
முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடல் மூணாறை தவிர்க்கும் பயணிகள்
ADDED : பிப் 18, 2024 05:11 AM
மூணாறு: மூணாறில் முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டதால், இங்கு வருவதை பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
மூணாறில் மின்துறை சார்பிலான ஹைடல் சுற்றுலா மையங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
புதிய ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பிலான கேரள ஹைடல் சுற்றுலா தொழிலாளர்கள் சங்கத்தினர் பிப்.11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மூணாறைச் சுற்றியுள்ள மாட்டுபட்டி, குண்டளை, செங்குளம் அணைகள், எக்கோ பாய்ண்ட், பழைய மூணாறில் ஹைடல் பூங்கா ஆகியவை மூடப்பட்டன.
தவிர இரவிகுளம் தேசிய பூங்கா வரையாடுகளின் பிரசவத்திற்காக பிப். ஒன்று முதல் மூடப்பட்டு ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
மூணாறைச் சுற்றி முக்கிய சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டதால் இங்கு பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.