/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி பஸ் ஸ்டாப்பில் மரம் சாய்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - லாரி மீது விழுந்ததில் கிளீனர் பலி
/
குமுளி பஸ் ஸ்டாப்பில் மரம் சாய்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - லாரி மீது விழுந்ததில் கிளீனர் பலி
குமுளி பஸ் ஸ்டாப்பில் மரம் சாய்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - லாரி மீது விழுந்ததில் கிளீனர் பலி
குமுளி பஸ் ஸ்டாப்பில் மரம் சாய்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - லாரி மீது விழுந்ததில் கிளீனர் பலி
ADDED : மே 30, 2025 03:28 AM

கூடலுார: குமுளி பஸ் ஸ்டாப்பில் பலத்த காற்றினால் ரோட்டின் குறுக்கே மரம் சாய்ந்ததில் தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி மீது விழுந்ததில் கிளீனர் பலியானார்.
பலத்த காற்று மழையினால் குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாப்பில் நேற்று மதியம் 2 மணிக்கு ராட்சத மரம் ரோட்டில் குறுக்கே சாய்ந்தது. பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசு பஸ், கார், லாரி மீது விழுந்ததில் லாரியின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்தது.
தமிழக போலீசார், வனத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பெரிய மரமாக இருந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் குமுளி மலைப்பாதையில் நீண்ட கியூவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 6:00 மணிக்கு மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டது.
கிளீனர் பலி
கேரள மாநிலம் பாலாவிலிருந்து பெரியகுளம் நோக்கிச் சென்ற லாரி பழுது ஏற்பட்டு குமுளி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவர் மனோஜ், கிளீனர் ஸ்ரீஜித் உட்பட 3 பேர் லாரியில் இருந்தனர். மரம் விழுந்ததில் மூன்று பேரும் லாரியில் சிக்கினர். பீர்மேடு, கம்பம் தீயணைப்பு துறையினர் லாரியில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் உடல் நசுங்கி கிளீனர் சிரஞ்சீவி 19, பலியானார். மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆபத்தான மரங்கள்
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதையில் இதே போன்று பல ஆபத்தான மரங்கள் உள்ளன.
தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் இவைகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் முன் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.