/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
த.வெ.க., மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்
/
த.வெ.க., மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 13, 2025 02:25 AM
தேனி: மதுரையில் ஆக.21ல் தமிழக வெற்றி கட்சியின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தேனியில் தனியார் திருமண மஹாலில் நடந்தது. வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
இணைச் செயலாளர் விக்னேஷ், மாவட்டப் பொருளாளர் ராஜசீராளன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
மதுரையில் நடக்கும் 2வது மாநாட்டிலும் விக்கிரவாண்டியை மாநாட்டை விட 2 மடங்கு தொண்டர்கள் பங்கேற்பது உறுதியாகிவிட்டது.
2026 த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராவது உறுதியாகிவிட்டது என்றார்.
முன்னதாக ஆண்டிபட்டியில் நடந்த த.வெ.க., தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.