ADDED : டிச 25, 2024 08:11 AM
கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே தென் பழனி காலனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தென் பழனி காலனியைச் சேர்ந்த இருளப்பன் 62, என்பவர் தனது அலைபேசி மூலம் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 16 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
பெரியகுளம் : எ.புதுக்கோட்டை ஜே.கே.காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 63. இவர் அரசு போக்குவரத்து டெப்போ அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், சுப்பிரமணியை கைது செய்து லாட்டரி விற்ற ரூ.500 பணம், ரூ.120 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.