/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ்சில் கண்டக்டரிடம் அலைபேசி பறித்த இருவர் கைது
/
அரசு பஸ்சில் கண்டக்டரிடம் அலைபேசி பறித்த இருவர் கைது
அரசு பஸ்சில் கண்டக்டரிடம் அலைபேசி பறித்த இருவர் கைது
அரசு பஸ்சில் கண்டக்டரிடம் அலைபேசி பறித்த இருவர் கைது
ADDED : மே 30, 2025 03:26 AM
தேவதானப்பட்டி: சின்னமனூர் புது கிணற்றுத்தெருவைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சுரேஷ் 43. அருகே உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முத்தீஸ்வரன் 43. கடந்த மே 24 ல் கோவையிலிருந்து கம்பம் நோக்கி
பயணிகளை ஏற்றிக்கொண்டு (டி.என்.57 எண் 2567) என்ற பஸ் சென்று கொண்டிருந்தது. அன்று அதிகாலை 2:45 மணிக்கு வத்தலக்குண்டில் இருவர் ஏறி, தேவதானப்பட்டிக்கு டிக்கெட் எடுத்தனர். அதிகாலை 3:00 மணிக்கு பஸ் அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே வந்த போது இருவரும், பயணி ஒருவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனை கண்டக்டர் சுரேஷ் விலக்கி விட்டார்.
அந்த நேரத்தில் இருவரில் ஒருவர் டிரைவர் முத்தீஸ்வரன் அலைபேசியை பறித்துக் கொண்டு தப்பமுயன்றனர். கண்டக்டர் சுரேஷ் அவர்களை தடுத்து நிறுத்தி அலைபேசியை மீட்டார். கண் இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் சுரேஷ் அலைபேசியை பறித்துக் கொண்டு ஓடும் பஸ்சில் குதித்து இருவரும் தப்பினர். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். இதில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த முகமது இதாஸ் 23. அதே ஊர் தெற்கு தெருவைச் சேர்ந்த இவரது 17 வயது நண்பர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த அலைபேசி கைப்பற்றப்பட்டது.