/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் இருவர் கைது
/
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் இருவர் கைது
ADDED : செப் 29, 2024 03:07 AM
தேனி:தேனி மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் ஏற்கனவே 21 பேர் கைதான நிலையில் நேற்று பெரியகுளம் அருகே வடுகபட்டி லாரி டிரைவர் செல்வக்குமார் 36, தனியார் நிறுவன ஊழியர் ஜெயபால் 37 , ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி பகுதிகளில் அரசு அதிகாரிகள் துணையுடன் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்டது. இதனை அப்போது பெரியகுளம் சப்கலெக்டராக இருந்த ரிஷப் கண்டறிந்தார்.
அரசு நிலத்தை அபகரிக்க உதவிய ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என ஏற்கனவே 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செல்வக்குமார், ஜெயபால் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.