/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலிகள் கணக்கெடுப்பிற்காக இருந்த 2 கேமராக்கள் திருட்டு
/
புலிகள் கணக்கெடுப்பிற்காக இருந்த 2 கேமராக்கள் திருட்டு
புலிகள் கணக்கெடுப்பிற்காக இருந்த 2 கேமராக்கள் திருட்டு
புலிகள் கணக்கெடுப்பிற்காக இருந்த 2 கேமராக்கள் திருட்டு
ADDED : ஆக 10, 2025 03:23 AM
கூடலுார்: கூடலுார் அருகே வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த 2 தானியங்கி டிஜிட்டல் கேமராக்கள் திருடு போனது.
தமிழக கேரள எல்லையில் கூடலுார் மற்றும் கம்பம் மேற்கு வனப்பகுதி உள்ளது.
ஆக.1ல் தமிழக வனக்குழுவினர் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தினர். கம்பம் மேற்கு வனப்பகுதியில் உள்ள கூடலுார் பிரிவு சுரங்கனாறு பீட்டில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரண்டு இடங்களில் டிஜிட்டல் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சேதமடையாமல் இருக்க இரும்பு பெட்டிக்குள் வைக்கப்பட்டு பூட்டப்பட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வனக்காப்பாளர் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் புலிகள் நடமாட்டம் குறித்து அறிய கேமராவில் உள்ள மெமரி கார்டை எடுக்கச் சென்றனர். அங்கு இரும்பு பெட்டியை உடைத்து இரண்டு கேமராக்களும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து வனக்காப்பாளர் குமுளி போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கேமரா திருடர்களை தேடி வருகின்றனர்.
வனப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்த கேமராக்களை திருடப்பட்டதால் வனவிலங்கு வேட்டையாடுபவர்களும் மரக் கடத்தல்காரர்களும் வனப்பகுதியில் நடமாடுவது தெரியவந்துள்ளது.