/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோழிக்கூண்டில் சிக்கிய இருதலை மணியன் பாம்பு
/
கோழிக்கூண்டில் சிக்கிய இருதலை மணியன் பாம்பு
ADDED : அக் 31, 2025 02:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி:  பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டி ஜெயச்சித்ரா தோட்டத்து வீட்டில்  கோழிகள் கூண்டில் வளர்த்து வருகின்றனர். கோழி கூண்டில் நல்லபாம்பு படுத்துள்ளதாக பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், லோகேஸ் கூண்டினை திறந்து நல்லபாம்பு பிடிக்கும் கருவியால் பிடிப்பதற்கு தயாராகினர். அங்கு கூண்டில் இரு தலை மணியன் பாம்பினை லாவகமாக பிடித்தனர்.  இரு தலை மணியன் பாம்பு சாக்கில் போடப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி, தேவதானப்பட்டி வனச்சரகம் வனவர் முகேஷிடம் ஒப்படைத்தார். வனப்பகுதியில் இரு தலை மணியன் பாம்பு விடப்பட்டது.

