ADDED : ஆக 24, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கடமலைக்குண்டு கே.கே.புலியூர் சோதனை சாவடி அருகே 2018 ல் ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா கடத்திய ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம் வாசகமூர்த்தி 30, சுரேஸ் 28 ஆகியோரை போலீசார் கைது செய்து ஆட்டோ, கஞ்சாவை கைப்பற்றினர்.
இவ்வழக்கு விசாரணை மதுரை தென்மாவட்ட வகுப்புவாத நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னம் நேற்று தீர்ப்பளித்தார். இதில் கஞ்சா கடத்திய வாசகமூர்த்தி, சுரேஸ் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. ஒருலட்சம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க உத்தவிட்டார்.