ADDED : செப் 19, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் பால்பாண்டி 31. இவரது தங்கை துர்காதேவி 23. இருவரும் தேனியில் இருந்து பெரியகுளம் ரோட்டில் டூவீலரில் சென்றனர்.
இவர்களுக்கு பின்னால் அன்னஞ்சி பிள்ளையார் கோயில் தெரு முகேஷ்ராம் 19 , பெரியகுளம் கள்ளிபட்டி அமர்நாத் 19, ஆகியோர் ஒரு டூவீலரில் சென்றனர்.
முகேஷ்ராம் ஒட்டிச் சென்ற டூவீலர் பால்பாண்டி சென்ற டூவீலரில் மோதியது.
விபத்தில் காயமடைந்த 4 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
தலையில் காயமடைந்த முகேஷ்ராம் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பால்பாண்டி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.