/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதலில் இருவர் பலி
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதலில் இருவர் பலி
ADDED : அக் 06, 2024 01:50 AM
கடமலைக்குண்டு: தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் 23. இவர் கிராமங்களில் பால் சேகரித்து பண்ணைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு இவரது தம்பி பெருமாளை கடமலைக்குண்டில் ஒரு ஓட்டல் அருகே இறக்கிவிட்டு தனது டூவீலரில் கடமலைக்குண்டில் இருந்து கொம்புக்காரன்புலியூர் சென்றுள்ளார். தேவராஜ் நகர் அருகே சென்ற போது எதிர் திசையில் பாலூத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரதீபன் 16, ஓட்டி சென்ற டூவீலர் தேவராஜ் நகர் அருகே நேருக்கு நேர் மோதியது.
டூவீலர் ஓட்டி சென்ற பிரதீபன், வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இருவரும் ெஹல்மெட் அணியவில்லை. பிரதீபன் கடமலைக்குண்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பிரதீபன் ஓட்டி சென்ற வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் மாலியன் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கடமலைக்குண்டு எஸ்.ஐ., முஜிபுர் ரஹ்மான் விசாரிக்கிறார்.