ADDED : ஏப் 06, 2025 08:03 AM
கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே வெவ்வேறு இடங்களில் இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்டமனூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் தாமடையன் 48, இவரது மகள் மகாலட்சுமி 21, பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏப்ரல் 2ல் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வெளியில் சென்றார். பின் வீடு திரும்ப வில்லை. மகள் காணவில்லை என தாமடையன் புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* குப்பிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் வனிதா 37, இவரது மகள் சத்யா 19, அரண்மனைபுதூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சத்யா குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவர் வெளியில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மார்ச் 29 ல் தோட்டத்து பக்கம் போய் வருவதாக கூறி சென்ற சத்யா திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை. தாய் வனிதா புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.