/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடு இல்லாத கிராம சேவை மைய கட்டடம்
/
பயன்பாடு இல்லாத கிராம சேவை மைய கட்டடம்
ADDED : டிச 30, 2024 06:24 AM

போடி: போடி அருகே மணியம்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது.
மணியம்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகத்துடன் கூடிய கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஆண்டுகள் மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இங்கு இரவு சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளன. கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இக்கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.