ADDED : ஜூன் 11, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட 18 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் பணிகள் முடிந்து பல மாதமாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
தமிழக அரசு மூலதன மானிய நிதியின் கீழ் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அபிவிருத்தி பணியில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களின் ஆதரவானவர்களுக்கு கடைகள் கிடைக்க பேரூராட்சி நிர்வாகத்தை நிர்ப்பந்தம் செய்து வந்தனர். மாவட்ட நிர்வாகம் கடைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு டெண்டர் முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கடைகளை ஒதுக்கீடு செய்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல மாதங்களாக தாமதம் ஏற்படுகிறது. பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.