/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மயானத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடம்: வீணாகும் அரசு நிதி
/
மயானத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடம்: வீணாகும் அரசு நிதி
மயானத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடம்: வீணாகும் அரசு நிதி
மயானத்தில் பயன்பாட்டிற்கு வராத கழிப்பிடம்: வீணாகும் அரசு நிதி
ADDED : ஆக 03, 2025 04:02 AM

கூடலுார் : கூடலுார் பொது மயானத்தில் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மத்திய அரசு நிதி வீணாகும் நிலை உள்ளது.
கூடலுார் பொது மயானத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.18.96 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டப்பட்ட இக்கழிப்பிடம் பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
மயானத்திற்குள்அமைக்கப் பட்டுள்ள கழிப்பறையில் பெண்கள் வந்து பயன்படுத்த முடியாது என அதிகாரிகளுக்கு தெரிந்தும், அப்பகுதியில் பெண்கள் கழிப்பிடம் அமைத்திருப்பது நிதியை வீணடிப்பதாக உள்ளது என பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இதனை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கழிப்பறையை யாரும் பயன்படுத்தாமல் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு மத்திய அரசு நிதியான ரூ.19 லட்சம் வீணாகும் வகையில் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டி வைத்திருப்பது பொதுமக்களை புலம்பச் செய்துள்ளது.