/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னை சாகுபடியை ஊக்குவிக்க வலியுறுத்தல்
/
தென்னை சாகுபடியை ஊக்குவிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2025 12:12 AM
கம்பம்: தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தென்னை 20 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை நீண்ட கால வருவாய்க்கு உத்தரவாதம் அளிப்பதாலும் தென்னையை விரும்பி சாகுபடி செய்கின்றனர். தென்னை வேளாண் பயிர் பட்டியலில் இருந்து கடந்தாண்டு தோட்டக்கலை பயிராக மாற்றினர். வேளாண் துறைக்கு நெல் மற்றும் மானாவாரி பயிர்கள் மட்டுமே உள்ளன.
தென்னை விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக தென்னைக்கு மானியங்கள் மற்றும் திட்டங்கள் மாநில அரசு தருவதில்லை. தென்னை வளர்ச்சி வாரியமே பல திட்டங்களை செயல்படுத்துகிறது. கொப்பரை கொள்முதல் மட்டும் மாநில அரசு செய்கிறது. நோய் தாக்குதல், விலை குறைவு, பராமரிப்பு செலவு அதிகரித்தல் என சிக்கல்கள் அதிகரித்து வருகிறது . எனவே தென்னைப் பயிருக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தோட்டக்கலைத் துறையினருக்கு ஏற்கெனவே பல்வேறு பயிர்கள் அதிகம் இருப்பதால், தென்னையில் கவனம் செலுத்துவது சிரமம். எனவே, வேளாண் பயிராக அறிவிக்க உத்தரவிட வேண்டும். விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், என்றனர்.