/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வூதியர்கள் களஞ்சியம் செயலியை பயன்படுத்துங்கள்
/
ஓய்வூதியர்கள் களஞ்சியம் செயலியை பயன்படுத்துங்கள்
ADDED : டிச 21, 2024 08:07 AM
தேனி : ஓய்வூதிய தாரர்கள் களஞ்சியம் செயலியை பயன்படுத்தி பயனடையுமாறு கருவூலத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
களஞ்சியம் செயலியை பயன்படுத்துவது, அதன்பயன்கள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது: கருவூலத்தில் வழங்கி உள்ள சுயவிபரங்களை இச்செயலியில் பார்த்துக்கொள்ளலாம். மேலும் அலைபேசி எண், முகவரி, இ-மெயில் முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். ஓய்வூதிய ரசீது(பென்சன் சிலீப்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யும் வருமான வரி செலுத்தியதற்கான ஆவணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கொருமுறை இருப்பிடத்தில் இருந்தே நேர்காணலை சமர்ப்பிக்கலாம்.
கருவூலத்திற்கு நேரடியாக வந்து சமர்ப்பிக்க தேவையில்லை. விழாக்கால முன்பணம் பெற்றுக்கொள்ளலாம். லைப் டைம் அரியர்ஸ், பி.எஸ்.எப்., போன்றவற்றிற்கு தேவையான முன்மொழிவு விபரங்களை செயலியில் செய்து கொள்ளலாம்.
மேலும், ஓய்வூதியர்கள் இறந்து விட்டால் கருவூலத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் ஓய்வூதியத்தை எடுத்து செலவு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு செலவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றனர்.

