ADDED : ஜன 18, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி தாலுகா அலுவலக வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி முட்செடிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
போடி தாலூகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் பல்வேறு வகை சான்றுகள் பெற வருகை தருகின்றனர்.
தாலூகா அலுவலக வளாக பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசி முட்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்பாடு இன்றி உள்ளது.
சுகாதார வளாகத்தை மக்கள் பயன் படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பல மாதங்களாக பயன்பாடு இன்றி உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.